search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளாஸ்டிக் பறிமுதல்"

    தா.பழூர் ஒன்றியத்தில் அரசால் தடை செய்யப்பட்ட 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 35 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    தா.பழூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயராஜ் மற்றும் குணசேகரன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் 2 குழுக்களாக பிரிந்து தா.பழூர், கோட்டியால், சுத்தமல்லி, விக்கிரமங்கலம், உதயநத்தம் ஆகிய கிராமங்களில் உள்ள பல்வேறு கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதா? என்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தா.பழூர் கடைவீதியில் கடைகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 16 கடைகளுக்கு ரூ.2 ஆயிரத்து 600 அபராதமாக விதிக்கப்பட்டது.

    மேலும் உதயநத்தம் கிராமத்தில் 2 கடைகளுக்கு ரூ.500, கோடாலிகருப்பூர் கிராமத்தில் உள்ள ஒரு கடைக்கு ரூ.200, கோட்டியால் கிராமத்தில் 4 கடைகளுக்கு ரூ.800, ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் 2 கடைகளுக்கு ரூ.700, விக்கிரமங்கலம் கிராமத்தில் 5 கடைகளுக்கு ஆயிரத்து 500 ரூபாய், சுத்தமல்லி கிராமத்தில் 5 கடைகளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை நடைபெற்ற கடைகளில் இருந்து மொத்தம் 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒன்றியம் முழுவதும் மொத்தம் 35 கடைகளுக்கு ரூ.7 ஆயிரத்து 300 அபராதமாக விதிக்கப்பட்டு, வசூல் செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்தால் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர். ஆய்வில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், சத்யராஜ், சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    புள்ளம்பாடியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    டால்மியாபுரம்:

    திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி பேரூராட்சியில் கடை மற்றும் வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன் படுத்துவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் பேரூராட்சி செயல் அலுவலர் சாகுல் அமீது தலைமையில் அலுவலர்கள் களஆய்வு சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது கடைகளில் விதி முறைகள் மீறிபயன் படுத்திய  5 கிலோபிளாஸ்டிக் பைகளை கைப்பற்றினார்கள்.மேலும் கடையின் உரிமையாளர்களுக்கு ரூ.1300 அபராதம் விதித்தனர்.

    இந்த சோதனையில் இளநிலை அலுவலர் குமார், வரிதண்டலர்  பாஸ்கர் சுகாதார பரப்புரையாளர்கள், பணியாளர்கள்  ஈடுபட்டனர்.

    சென்னையில் 1-ந்தேதி 2.25 மெட்ரிக் டன், 2-ந்தேதி 8.35 மெட்ரிக் டன் என மொத்தம் 12.48 மெட்ரிக் டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #PlasticBan
    சென்னை:

    தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த 1-ந்தேதி முதல் தடை செய்யப்பட்டுள்ளது. மக்கும் தன்மையற்ற பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு இயற்கை வளமும் சீரழிகிறது.

    அதனால் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முதல் கட்டமாக தடை விதித்து அவற்றை அப்புறப்படுத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னையில் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யும் நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் இறங்கியுள்ளனர். வீடு வீடாக சென்று பிளாஸ்டிக் பை, கவர், டம்ளர் போன்றவற்றை சேகரித்தனர். பொதுமக்கள் தாமாக முன் வந்து பிளாஸ்டிக் பொருட்களை ஒப்படைத்து வருகிறார்கள். மேலும் புத்தாண்டு தினத்திலும் பிளாஸ்டிக் சேகரிப்பில் ஈடுபட்டார்கள். 15 மண்டல அலுவலகங்களிலும் அதிகாரிகள் தலைமையில் ஊழியர்கள் களம் இறங்கினர். 31-ந்தேதி சுமார் 1.88 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பொருட்கள் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டன.

    1-ந்தேதி 2.25 மெட்ரிக் டன், 2-ந்தேதி 8.35 மெட்ரிக் டன் என மொத்தம் 12.48 மெட்ரிக் டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


    ஓட்டல்கள், கடைகள், திருமண மண்டபங்கள், மால்கள், சூப்பர் மார்க்கெட் போன்றவற்றிற்கு சென்ற ஊழியர்கள் தடையை மீறி பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். ஆரம்ப கட்டத்தில் வியாபாரிகள், பொது மக்களிடம் பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

    இன்னும் ஒரு சில நாட்களில் அபாராதம் விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தொழிற் சாலைகள், வியாபாரிகள், குடோன்கள் தயாரிப்பாளர்கள் என பல்வேறு பிரிவுகளாக பிரித்து அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் ஒரே விதமான அபராதம் வசூலிக்க அரசு முடிவு செய்துள்ளது. எந்தெந்த நிலையில் பிளாஸ்டிக் பயன்படுத்துவோருக்கு எவ்வாறு அபராதம் விதிக்க வேண்டும் என்பது குறித்து அரசுக்கு சென்னை மாநகராட்சி செயல் வடிவம் அனுப்பியுள்ளது. இதுபற்றி இன்னும் ஒரு சில நாட்களில் முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிட உள்ளது. #PlasticBan
    ×